Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்த நாட்டில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை: ஜனா

In இலங்கை
Updated: 07:09 GMT, Jan 13, 2018 | Published: 07:09 GMT, Jan 13, 2018 |
0 Comments
1106
This post was written by : Vithushagan

இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்  தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்மைப்பின் பாலையடி வட்டாரத்திற்கான காரியாலயம் நெல்லிக்காடு கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ இலங்கயிலே தமிழன் வாழ்கின்றான், அதுவும் உரிமையிழந்து வாழ்கின்றான், தமிழனிம் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது, தமிழினம் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை இவ்வுலகுக்கு எடுத்துக் காட்டியது ஆயுதப் போராட்டம்தான் என்பதை யாவரும் அறிவோம்.

2009 ஆம் ஆண்டு அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் இன்றும் அடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை வெளியுலகிற்குத் தெரியப்படுத்திக் கொண்டிருப்பது கூட்டமைப்பு மாத்திரம்தான்.

கல்வி, காலை, கலாசாரம், பொருளாதாரனம் உள்ளிட்ட பல வழங்களை நாங்கள் கடந்த காலங்களில் இழந்நிருக்கின்றோம். இவ்வாறான வழங்களை எமக்குரிய நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைத்தவுடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து இந்த நாட்டிலே தமிழ் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. இந்நாட்டிலே சிங்களம் மட்டும் என்ற சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டதோ, அன்றே தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்கள்.

இதற்கான ஒரு அரசியல் தீர்வுக்காக பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் என இரண்டு ஒப்பந்தங்களும் கிளித்தெறியப்பட்டன. இதன் காரணத்தினால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் இன்று நாங்கள் இந்த நிலையில் இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg