Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயேசு கிறிஸ்து செய்த போதனை! – ஆண்டவரே அனைத்திற்கும் பொறுப்பு

In ஆன்மீகம்
Updated: 07:49 GMT, Jan 13, 2018 | Published: 07:49 GMT, Jan 13, 2018 |
0 Comments
1141
This post was written by : Puvanes

இயேசு கிறிஸ்து உலகின் பல இடங்களுக்கும் சென்று மதபோதனையில் ஈடுபட்டார். அவரின் போதனையால் மக்கள் ஈர்க்கப்பட்டனர். நோய்களைத் தீர்த்து வந்த அவருடைய சக்தியை மக்கள் வியந்தனர். இதனால் அவர் புகழ் எங்கும் பரவியது.

புகழ் பரவியதால் இயேசு கிறிஸ்து செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. இப்படி ஒரு தடவை மக்களுக்காக ஓர் குன்றின் மீது அமர்ந்து போதனை செய்கின்றார் இயேசு கிறிஸ்து.

தான் அமர்ந்திருந்த குன்றின் மீதியிருந்து இயேசு கிறிஸ்து மக்களைப் பார்க்கின்றார். அப்போது ஏழைகளும், மனவருத்தத்தில் உள்ளவர்களே அதிகமாக அச்சனக்கூட்டத்தில் இருப்பதை இயேசு கிறிஸ்துவின் பார்வையில் படுகின்றது.

இதனைக் கண்ட இயேசு கூறுகின்றார்…..

மனம் வருந்தாதீர்கள். சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்சியமே. தங்களுக்கு ஆறுதல் வேண்டும் எனக் கேட்பவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

அன்போடும், கருணையோடும் இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும். தூய இதயத்தோடு உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவனின் புதல்வர்கள் என அழைக்கப்படுகிறார்கள். துன்பப்படுகிறவர்கள் அதற்கான பரிசாக சொர்க்கத்தை அடைவார்கள்.

ஆண்டவர் மேல் நம்பிக்கை வையுங்கள். அவர் என்றும் உங்களை ஆசீர்வதிப்பார். உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவர் அந்த பொறுப்பேற்பார்.

மற்றவர்கள் நீங்கள் பிரார்த்தனை செய்வதை காண வேண்டும் என பொது இடங்களில் பிரார்த்தனை செய்யாதீர்கள். தனி அறைக்கு சென்று பரமண்டலத்திலிருக்கும் பரமபிதாவை பிரார்த்தியுங்கள். உங்களைப்பற்றி அறிந்த தந்தை உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார் அதை அவர்அருள்வார்.

என்ற வகையில் இயேசு கிறிஸ்து மக்களுக்கு போதனை செய்கின்றார். போதனை மட்டுமல்லாது எவ்வாறு பிரார்த்தனை செய்வது எனவும் இயேசு கிறிஸ்து மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

அனைத்தும் பரமபிதாவின் சித்தம். ஏழை, துன்பம், துயர் என்பன அனைத்தையும் அவர் பார்த்துக்கொள்வார், எப்போதும் அவர் ஆசீர்வதிப்பார் அவர் மீது நம்பிக்கை கொண்டால்…

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg