Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்களை விடவும் பெண்களே அதிக ஆயுள் கொண்டவர்கள்!

In அறிவியல்
Updated: 10:46 GMT, Jan 13, 2018 | Published: 10:46 GMT, Jan 13, 2018 |
0 Comments
1135
This post was written by : Puvanes

ஆண்களை விடவும் பெண்களுக்கே ஆயுள் அதிகம் என அமெரிக்காவின் யூடிக் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு முதலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண் -பெண் இருசாராரினதும் இறப்பு வீதம் கணக்கிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஆண்களை விடவும் 6 மாதங்கள் தொடக்கம் 4 வருடங்கள் பெண்களின் ஆயுள்அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பிறக்கும் குழந்தைகளின் இறப்பு வீதத்தினை கணக்கெடுத்தபோது ஆண்குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகளில் இறப்பு வீதம் குறைவு என்பதும் அறியப்பட்டுள்ளது.

ஆண்களைவிடவும் பெண்கள் மரபியல் ரீதியாகவும், உயிரியல் ரீதியாகவும் வலிமை மிக்கவர்களாக காணப்படுவதாலேயே இந்த மாற்றம் காணப்பட்டுவருவதாகவும் குறித்த ஆய்வின் முடிவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஆண்களை விடவும் பெண்களுக்கு ஹார்மோன்களின் சுரப்பு அதிகம் எனவும், பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளும் அதிகம் எனவும் அறியப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே பெண்கள் ஆண்களை விடவும் ஆயுள் கூடியவர்களாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg