Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ஓவியா!

In சினிமா
Updated: 13:55 GMT, Jan 13, 2018 | Published: 14:35 GMT, Jan 13, 2018 |
0 Comments
1787
This post was written by : Ravivarman

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஓவியா தனது இரசிகரின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவரது நல்ல எண்ணம், வெகுளித்தனம், அமைதி, காதல், உண்மை குணம் போன்றவற்றின் காரணமாக தமிழக மக்கள் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.

தனக்கென்று ஓவியா ஆர்மி, ஓவியா ஸ்வீட்ஸ் ஆகிய ஹேஷ்டேக்குகள் உருவாக காரணமாக இருந்துள்ளார். மேலும், எப்போதும் டுவிட்டரில் தனது இரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு புகைப்படம் எடுக்க போஸ் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது இரசிகர் ஒருவரின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்போது, அந்த வீட்டு பச்சிளம் குழந்தையை தூக்கி கொஞ்சும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நாளை காலை 9 மணிக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து பொங்கல் கொண்டாடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

vc

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg