Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்மாந்துறையில் அபிவிருத்திப் புரட்சி ஆரம்பம்: ரவூப் ஹக்கீம்

In இலங்கை
Updated: 16:35 GMT, Jan 13, 2018 | Published: 16:35 GMT, Jan 13, 2018 |
0 Comments
1165
This post was written by : Ravivarman

சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சம்மாந்துறையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், ‘கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா வரவு, செலவுத்திட்டத்தில் எனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பல்கலைக்கழகம் மூலம் இதற்கான செயற்றிட்ட வரைபை தயாரித்து, அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் நாங்கள் பெற்றுவிட்டோம். சம்மாந்துறைக்கு நவீன பஸ்தரிப்பு நிலையமும், சந்தைக் கட்டிடத் தொகுதியும் அமைத்துக் கொடுப்போம்.

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு பின்னாலுள்ள மைதானத்தை, 400 மீற்றர் ஓட்டப்போட்டி வைக்கக்கூடிய உள்ளக விளையாட்டு மைதானமாக புனரமைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துவிட்டோம்.

சம்மாந்துறையில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம். இவ்விடயம் தொடர்பில் பிரதமரும் என்னிடம் சில வாக்குறுதிகளை தந்திருக்கிறார். தற்போது ஆடைத் தொழிற்சாலையொன்றை நாங்கள் அமைத்துவருகிறோம்.

அதனை சிறந்ததொரு தொழிற்பேட்டையாக மாற்றுவதற்கான திட்டங்களையும் நாங்கள் வகுத்துவருகிறோம். நகர அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக இவை எல்லாவற்றையும் செய்வதற்கான வேலைகளை நாங்கள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.

இதற்கு முழுமையான உந்துதலை வழங்கும்முகமாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg