Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொங்கல் தினத்தில் பெருமை சேர்ப்பாரா? அஸ்வின்?

In கிாிக்கட்
Updated: 06:10 GMT, Jan 14, 2018 | Published: 05:42 GMT, Jan 14, 2018 |
0 Comments
1180
This post was written by : Anojkiyan
qck_134d5_1515858660

தமிழர்களின் தைத்திருநாளான பொங்கல் திருநாளான இன்று, நடைபெற்று வரும் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின், பெருமை சேர்ப்பாரா என்ற கேள்வி அனைத்து இரசிகர்களின் மத்தியிலும் எழுந்துள்ளது.

தற்போதைய கிரிக்கெட் உலகில் தமிழர்களின் பெயரை மேலோங்க செய்துவரும் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், நேற்று (சனிக்கிழமை) செஞ்சுரியனில் ஆரம்பமான இரண்டாவது போட்டியில், மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதேபோல, இன்றைய இரண்டாவது நாள் ஆட்டத்திலும் அவர் விக்கெட்டுகள் வீழ்த்தி பொங்கல் திருநாளில் தமிழ் இரசிகர்களுக்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிவேக ஆடுகளமான செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டதால், இந்திய அணி பாதிப்பை எதிர்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்ட நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் அஸ்வின் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி ஓட்டத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் அணித்தலைவர் விராட் கோஹ்லி, விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொண்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)