Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும்: சுமங்கல தேரர்

In இலங்கை
Updated: 10:11 GMT, Jan 14, 2018 | Published: 10:11 GMT, Jan 14, 2018 |
0 Comments
1216
This post was written by : Puvanes

மத்திய வங்கி ஊழலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக சட்டத்தின் முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும் என ஊழல் முன்னணியின் தலைவர் உலபனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,

கடந்தகாலத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நியமிக்கப்பட்டது ஊழல் செய்வதற்காகவே என்பது இப்போது நிரூபனமாகிவிட்டது இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே மூல காரணம் என்பதும், அவர் மத்திய வங்கி ஊழலுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளார் என்பதும் வெளிப்படுத்தப்பட்டு விட்டது.

தற்போதைய நிலையில் குறித்த ஊழலுக்கு முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை மட்டும் குற்றவாளியாக்க நல்லாட்சி அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. இந்த விடயத்தில் இன்னும் அர்ஜுன் மகேந்திரன் கைது செய்யப்படாமல் இருப்பது நாட்டின் நீதி செயற்பாடுகள் மீது வெட்கத்தை ஏற்படுத்துகின்றது.

மற்றொரு பக்கம் ஊழல் திருடர்களான கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க எந்தவித தகுதியும் இல்லை, காரணம் அவர்களும் ஊழல்வாதிகளே என சுமங்கல தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg