Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்லாந்தில் அதிவேகப் படகில் வெடிப்பு: 16 பேர் காயம்

In உலகம்
Updated: 12:32 GMT, Jan 14, 2018 | Published: 12:32 GMT, Jan 14, 2018 |
0 Comments
1121
This post was written by : Suganthini

தாய்லாந்தின் பை பை லே (Phi Phi) தீவில் அதிவேகப் படகொன்று திடீரென்று வெடித்ததில், 16 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூகேட் தீவிலிருந்து பை பை தீவுக்கு இந்தப் படகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றுகொண்டிருந்தபோது, படகின் இயந்திரம் முதலில் தீப்பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தப் படகில் வெடிப்பு ஏற்பட்ட வேளையில், அப்படகில் 31 பயணிகள் இருந்துள்ளனர். இவர்களில் சீனாவைச் சேர்ந்த 27 சுற்றுலாப் பயணிகள் அடங்குகின்றனர்.

14 சுற்றுலாப் பயணிகளும் 2 மாலுமிகளும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சீனாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பெருமளவானோர் அடங்குகின்றனர்.

காயமடைந்தவர்களில் சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ளதாகவும், சிலர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணையை  ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg