Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹற்றனில் அதிசய முட்டையிடும் கோழி!

In இலங்கை
Updated: 10:43 GMT, Jan 17, 2018 | Published: 10:00 GMT, Jan 17, 2018 |
0 Comments
1193
This post was written by : Ravivarman

ஹற்றன் சிறுவர் பூங்காவுக்கு அருகாமையில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து, கோழியொன்று ஒவ்வொன்றும் 180 கிராம் நிறை கொண்ட பெரிய முட்டைகளை இட்டு வருவதாக பண்ணை உரிமையாளர் மூர்த்தி தெரிவித்தார்.

வழமையாக இந்தக் கோழி சுமார் அறுபது தொடக்கம் எழுபது கிராம் வரையான நிறை கொண்ட சாதாரண முட்டைகளை மாத்திரம் இட்டு வந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரட்டை கோதுடைய பெரிய முட்டையொன்றினை இட்டுள்ளதாகவும் கடந்த 14.01.2018 அன்று சுமார் 180 கிராம் கொண்ட அதிசயிக்கத்தக்க பாரிய முட்டை ஒன்றினை இட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதாரணமாக பெட்டை கோழி ஒன்று இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை முட்டை இடுவதாகவும், ஆனால் இந்த கோழி இரண்டு தடவைகள் வித்தியாசமான முட்டைகளை இட்டுள்ளதாகவும் பண்ணை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

Egg (4) Egg (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg