Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொன்விழா கண்ட தடகள பயிற்சியாளருக்கு கௌரவம்!

In
Updated: 12:42 GMT, Jan 15, 2018 | Published: 12:42 GMT, Jan 15, 2018 |
0 Comments
1182
This post was written by : Varothayan

கடந்த 50 ஆண்டு காலமாக விளையாட்டுத்துறையில் பயிற்றுவிப்பாளராக விளங்கிய யோகாநந்தா விஜயசூரியவின் சேவையை பாராட்டும் வகையில் கௌரவிப்பு நிகழ்வொன்று நாளை மறுதினம் (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள தேசிய ஒலிம்பிக் குழுவின் கேட்போர்கூடத்தில் இடம்பெறவுள்ளது.

‘எதிர்கால விளையாட்டின் சுபீட்சம்’ என்ற தொனிப்பொருளின் கீழேயே ‘SAVE THE SPORTS’ என்ற தன்னார்வ அமைப்பானது இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

தடகள விளையாட்டுப்போட்டிகளின் பயிற்சியாளரான யோகாநந்தா விஜயசூரிய இலங்கையின் மூத்த பயிற்றுவிப்பாளராவார். இவரை ‘யோகா’ என்று நணபர்களும் ‘யோகா சேர்’ என்று மாணவர்களும் அழைப்பர். இவர் தேசிய ரீதியில் 110 மீட்டர் தடகள ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பிடித்தவர்.

இவர் 1967ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் பண்டாரவளை விளையாட்டுத்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த 37 வருடங்களுக்கு முன்பு 1979ஆம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் விளையட்டுத்துறை பாடசாலை நிறுவப்பட்டது. இப்பாடசாலை நிறுவப்பட்டதில் யோகாநந்தா விஜயசூரியவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg