Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மைதானத்தில் ஒழுக்கமற்ற முறையில் நடந்துக்கொண்டதால் கோஹ்லிக்கு கிடைத்த தண்டனை!

In கிாிக்கட்
Updated: 07:47 GMT, Jan 17, 2018 | Published: 06:48 GMT, Jan 17, 2018 |
0 Comments
1151
This post was written by : Anojkiyan

தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டநேரத்தின் போது, தென்னாபிரிக்க அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 25ஆவது ஓவரில் துடுப்பொடுத்தாடிய போது, இந்திய அணியின் தலைவர், ஒழுக்கமற்ற முறையில் நடந்து கொண்டதாக தெரியவருகின்றது.

இதனால், போட்டி கட்டணத்தில் இருந்து நூற்றுக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.

இதனிடையே இந்திய அணியின் முதலாவது இன்னிங்ஸில் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, 153 ஓட்டங்களை பெற்று கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg