Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நண்பன் நெதன்யாகுடன் இணைந்து புதுமையான இந்தியாவை உருவாக்குவேன்: பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 03:54 GMT, Jan 18, 2018 | Published: 03:54 GMT, Jan 18, 2018 |
0 Comments
1201
This post was written by : Kemasiya

“புதுமையான இந்தியாவை உருவாக்க நானும் என்னுடைய நண்பன் பெஞ்சமின் நெதன்யாகுவும் இணைந்து செயலாற்றுவோம்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுடன் குஜராத்திற்கான விஜயத்தை நேற்று (புதன்கிழமை) மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, அங்கு இயற்கை வேளாண்மை விவசாயப்பண்ணையில் ‘ஜகிரியேட்’ எனப்படும் சர்வதேச தொழில்நுட்ப மையத்தை ஆரம்பித்து வைத்தபின்னர், மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

“நான் இஸ்ரேலுக்கு சென்றிருந்த போது இந்த இயற்கை வேளாண்மை அமைப்பின் ‘ஜகிரியேட்’ திட்டத்தை உருவாக்குவதற்கு இஸ்ரேலின் ஆதரவைக் கோரியிருந்தேன். அதற்கு சம்மதித்த நெதன்யாகு இந்தியா வருவதற்கு காத்திருந்தார்.

தற்போது எமது பாரதத்திற்கு வந்துள்ள அவர் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். தொடர்ந்தும் ஒட்டுமொத்த அமைப்புக்களையும் புதுமையாக்க நாங்கள் உழைப்போம் ” என அவர் கூறியிருந்தார்.

இதே போன்று அம் மக்கள் மத்தியில் உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர், “ சிமாட் தொடர்பாடல் தொழில்நுட்பம் பற்றி அறிந்த உலகம் இனி ‘ஜகிரியேட்’  பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்ரேல் மற்றும் இந்தியா இணைந்து ஏராளம் புதிய திட்டங்களை உருவாக்கி வளர்ச்சி காணும் எனக் கூறிய அவர், தனது உரையின் இறுதியில் ‘ஜெய் ஹிந்தி’, ‘ஜெய் பாரத்’, ‘ஜெய் இஸ்ரேல்’, நன்றி பிரதமர் மோடி அவர்களே” எனக் கூறி உரையை நிறைவுசெய்தார்.

இதே போன்று நேற்று காந்தி நினைவிடத்திற்கு சென்றிருந்த வேளை, அகமதாபத் அருகே உள்ள பாவ்லா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடல்நீரை குடிநீராக்கும் வசதி கொண்ட ரூ.71 லட்சம் மதிப்புள்ள ஜீப்ரக இயந்திரமொன்றை இஸ்ரேல் பிரதமர் இந்தியப் பிரதமருக்கு பரிசாக வழங்கினார்.

இந்த இயந்திரம் ராணுவ வீரர்களுக்கும், கிராம மக்களுக்கும் சுத்தமான நீர்கிடைக்க உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

fgfghn fghh gvkgjh Untitled xfgdfg xfgsg

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg