Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் சட்டமூலத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சைக் கொடி!

In
Updated: 04:21 GMT, Jan 18, 2018 | Published: 04:21 GMT, Jan 18, 2018 |
0 Comments
1273
This post was written by : Risha

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான பிரெக்சிற் சட்டமூலத்திற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளனர்.

பல வாரங்களாக நீடித்த விவாதங்களை தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாக்கெடுப்பின்போது இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்திற்கான 324 மொத்த வாக்குகளில் 295 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்நிலையில், இச்சட்டமூலமானது மேலவைக்கு கொண்டு செல்லப்படவுள்ள நிலையில் அங்கு போரை சந்திக்க வேண்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதன் மூலம், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் முக்கிய சட்டத்தை உள்ளடக்கியதே இந்த பிரெக்சிற் சட்டமூலமாகும்.

நாடாளுமன்றத்தின் ஊடாக இச்சட்டமூலமானது இந்தளவிற்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாக, பிரெக்சிற் அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வரலாற்று மைல்கல் முயற்சிக்கு நாட்டை தயார்ப்படுத்துவதற்கு இச்சட்டமூலம் மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டமூலத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி மேலவையில் மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg