Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மருத்துவத்துறை மாணவனின் இறுதிச்சடங்கு இன்று

In இந்தியா
Updated: 05:16 GMT, Jan 19, 2018 | Published: 03:53 GMT, Jan 19, 2018 |
0 Comments
1230
This post was written by : Kemasiya

டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவகல்லூரியில் கல்வி கற்கும் தமிழக மாணவனின் இறுச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது.

சரத்பிரபு என்ற குறித்த மாணவனின் சடலம் திருப்பூர் பாரப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று காலை இறுதிச்சடங்குகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சடலம் நேற்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும் தற்கொலை குறித்து எதுவித தகவல்களையும் பொலிஸ் மற்றும் வைத்தியசாலை தரப்புகள் வெளியிடவில்லை.

குறித்த மாணவன் பொட்டாசியம் விஷம் கலந்த நச்சு மருந்தை, ஊசி மூலம் தனக்கு தானே ஏற்றி தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மைக்காலமாக தமிழகத்தை சேர்ந்த்த மருத்துவத்துறை மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துவருவதாகவும், இந்த விடயத்தில் அரசு அக்கறை காட்ட வேண்டும் என்றும் பலதரப்பட்டோர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg