Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்டாள் தனது தாய் போன்றவள் என வைரமுத்து விளக்கம்

In இந்தியா
Updated: 07:50 GMT, Jan 19, 2018 | Published: 07:50 GMT, Jan 19, 2018 |
0 Comments
1431
This post was written by : Kemasiya

ஆண்டாள் தனது தாய் போன்றவள் என்றும் அவளை தான் ஒரு போதும் அவமதித்தது இல்லை என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

ஆண்டாள் சர்ச்சை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியன் மூலமே வைரமுத்து மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஆண்டாளின் தமிழை நாட்பது ஆண்டுகளாக தான் சுவாசித்து வருவதாகவும், அவரது தமிழை வைணவர்களை விட தான் அதிகம் அறிந்து வைத்துள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

மேலும் இனிமையான தமிழுக்காக மட்டுமல்லாது பெண் விடுதலை கருத்துக்காகவும் ஆண்டாளை தான் போற்றுவதாக  தெரிவித்துள்ளார்.

ஆண்டாள் குறித்த தனது பேச்சு தற்கால நிலைமையோடு பொருத்தி தவறாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டதாகவும், ஆராட்சி ஒன்றை மேற்கோள் காட்டி தான் பேசியதாகவும்1, அதை எல்லோரும் புரிந்து கொள்ள முடியாது என்றும் வைரமுத்து குறப்பிட்டுள்ளார்.

தற்போது இதைக் கூறியதற்காக மீண்டும் தன்னை தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும்” கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தவறான கருத்தை தெரிவித்தாக கூறி இந்து மத அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வைரமுத்துவிற்கு எதிரான கருத்துக்களையும் முன்வைத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg