Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையை தரிசிக்கவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட வெற்றிக்கிண்ணம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:15 GMT, Jan 20, 2018 | Published: 05:15 GMT, Jan 20, 2018 |
0 Comments
1140
This post was written by : Elakkiya

ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் வெற்றிக்கிண்ணம் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது. இலங்கை கால்பந்தாட்ட இரசிகர்களுக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த வெற்றிக்கிண்ணம் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது.

தொடரில் வெற்றிபெறும் அணிக்கு வழங்கப்படவுள்ள இந்த சம்பியன் கிண்ணம் ஆறு கண்டங்களைச் சேர்ந்த 51 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. தொடர்ந்து 150 நாட்கள் பல நகரங்களுக்கு இந்த வெற்றிக்கிண்ணம் கொண்டு செல்லப்படும்.

எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை 15 ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ள இந்த தொடருக்காக 32 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg