Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடல் கடந்து செல்லும் தோனியின் புகழ்! – சரித்திரம் படைக்கும் தோனி

In கிாிக்கட்
Updated: 06:05 GMT, Jan 21, 2018 | Published: 06:05 GMT, Jan 21, 2018 |
0 Comments
3341
This post was written by : Puvanes

இந்திய அணியின் முன்னாள் தலைவரும் நம்பிக்கை நட்சத்திரமுமான தோனி சிங்கப்பூரில் புதிதாக கிரிக்கெட் பயிற்சி நிலையம் ஒன்றினை தொடங்கியுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) குறித்த பயிற்சி நிலையத்தின் ஆரம்ப நிகழ்வு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களின் பங்களிப்புடன் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

தோனி ஏற்கனவே டுபாய் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் பயிற்சி நிலையம் ஒன்றினை ஆரம்பித்தார் அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட பலபகுதிகளிலும் கிரிக்கெட் பயிற்சி நிலையங்களை தோனி ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக தற்போது சிங்கப்பூரில் தோனியின் கிரிக்கெட் பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பயிற்சி நிலையத்தில் 6 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலாக சேர்த்துக்கொள்ளப்படவுள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்க விடயமாகும்.

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக், ஹர்பஜன்சிங் ஆகியோர் கிரிக்கெட் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்துள்ளனர். எனினும் அவர்கள் இந்தியாவில் மாத்திரமே தமது பயிற்சி நிலையங்களை நிறுவியுள்ளனர்.

இந்தவரிசையில் இணைந்துள்ள தோனி இந்தியாவைக் கடந்து சர்வதேச நாடுகளிலும் தனது பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg