Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல் தொடரின் முத்திரை வீரர்களின் பட்டியல் வெளியானது!

In கிாிக்கட்
Updated: 08:26 GMT, Jan 21, 2018 | Published: 08:26 GMT, Jan 21, 2018 |
0 Comments
2582
This post was written by : Puvanes

எதிர்வரும் ஐ.பி.எல் போட்டித்தொடரில் விளையாட 1122 வீரர்கள் பெயர்களை பதிவு செய்திருந்த நிலையில் அவர்களில் 578 பேர்களை மாத்திரம் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.

எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் பெங்களூரில் நடைபெறவுள்ளது. இதற்காக 1122 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

எனினும் அவர்களில் 578 வீரர்கள் கொண்ட இறுதிப்பெயர் பட்டியலை நேற்று (சனிக்கிழமை) இந்திய கிரிக்கெட் வாரியம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் 360 இந்திய வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த ஏலத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களுக்கு 2 கோடி, 1.5 கோடி, 1 கோடி, மற்றும் 50 லட்சங்கள் என்ற இந்திய பெறுமதி வீதமும், சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களுக்கு 40 லட்சம் முதல் 20 லட்சம் வரையிலான இந்திய பெறுமதியும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, யுவராஜ்சிங், அஸ்வின், ரஹானே, ஷிகர் தவான், கௌதம் கம்பீர், ஹர்பஜன்சிங் ஆகிய 6 இந்திய வீரர்களும், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல், கிறிஸ் கெய்ல், கீரன் பொல்லார்ட், வெய்ன் பிராவோ, கனே வில்லியம்சன், ஷகிப் அல் ஹசன், பாப் டு பிளிஸ்சிஸ் ஆகிய சர்வதேச வீரர்களும் அடங்களாக மொத்தமாக 16 வீரர்கள் முத்திரை வீரர்களாக இரண்டு பிரிவாக பட்டியலில் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg