Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

7 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழக வீரர்!

In கிாிக்கட்
Updated: 10:45 GMT, Jan 21, 2018 | Published: 10:45 GMT, Jan 21, 2018 |
0 Comments
2460
This post was written by : Puvanes

இந்தியா எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித்தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்துவிட்டது.

எதிர்வரும் 24ஆம் திகதி 3 ஆவது டெஸ்ட் போட்டி இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடவுள்ளது.

இந்தநிலையில் இந்திய வீரர் சஹா உபாதையடைந்துள்ள காரணத்தினால் அவருக்குபதில் 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பார்த்திப பட்டேல் விளையாடி வருகின்றார். இந்த நிலையில் அவரது ஆட்டம் சிறப்பாக இல்லை என இந்திய அணி தரப்பு தெரிவி்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்காரணமாக சஹாலின் இடத்தை பூர்த்தி செய்ய தினேஷ் கார்த்திக் மீண்டும் அணியில் இடம்பிடிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 2010ஆம் திகதிக்கு பிறகு இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம்பிடிப்பது வரவேற்கத்தக்க விடயம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg