Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டாவோஸில் ட்ரம்ப்புக்கு விருந்துபசாரம்

In ஐரோப்பா
Updated: 06:34 GMT, Jan 26, 2018 | Published: 06:34 GMT, Jan 26, 2018 |
0 Comments
1155
This post was written by : Suganthini

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களுடன் இரவுவேளை  விருந்துபசாரத்திலும்  கலந்துகொண்டார்.

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி  நடைபெற்று வருகின்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ட்ரம்ப் டாவோஸுக்கு சென்ற நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரவு நடைபெற்ற விருந்துபசாரத்தில் கலந்துகொண்டார்.

வர்த்தகத் தலைவர்களின் அழைப்பின் பேரில், ட்ரம்ப் இந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகவும், இதன்போது, தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்பனிகள் பற்றியும் தங்களைப் பற்றியும் வர்த்தகத் தலைவர்கள் அறிமுகப்படுத்தியதுடன், ட்ரம்ப்புடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg