Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்களுக்காக சில அழகுக் குறிப்புகள்!

In
Updated: 12:53 GMT, Jan 27, 2018 | Published: 12:53 GMT, Jan 27, 2018 |
0 Comments
1119
This post was written by : Puvanes

ஆணுக்கு செயற்கையான அல்லது தோற்ற அழகு அவசியம் இல்லை. முழுதானதோர் ஆணாக குணத்திலும் செயலிலும் மனதளவிலும் ஆண் அழகானவனாக இருந்தாலே போதும் என்ற இந்தக் கருத்து இந்த காலத்திற்கு பொருந்தாது.

காரணம் ஆண்களும் பெண்களுக்கு நிகராக அழகிய தோற்றத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தமது அழகை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமே இது. ஒரு வகையில் பெண்களுக்கு போட்டியாக ஆண்களின் சரும அழகுக் குறிப்புகளும், சாதனங்களும் தற்போது அதிகரித்தவாரே இருக்கின்றன.

அந்தவகையில் ஆண்கள் செயற்கை சாதனங்களை பயன்படுத்தாமல் தமது அழகினை அதிகரிக்கவும், இருக்கும் அழகை பேணிக்கெள்ளவும் சில எளிய முறைகளைப்பார்க்கலாம்.

பொதுவாக ஆண்களுக்கு வேலைப்பளு அதிகம் இதனால் அலைச்சலும் அதிகம் இந்த காரணத்தினால் ஆண்களின் முகம் வறட்சியாக காணப்படும். எனவே அன்றாடம் உறக்கத்திற்கு செல்லும் முன்னர் தமது முகத்தை நன்றாக கழுவிக்கொள்ளுதல் அவசியம்.

இதனால் தூசு மற்றும் வெயில் காரணமாக ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து முகத்தை பாதுகாத்துக்கொள்ளமுடியும். அதேபோன்று முகப்பரு பிரச்சினைகள் உள்ளவர்கள் சாதிக்காய் சந்தனம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவர பருக்கள் மறையும்.

பப்பாசிப்பழம் பெண்களுக்கு போலவே ஆண்களின் அழகையும் கூட்டும் பழங்களில் ஒன்றாகும். அதனால் தினமும் இரவு உறக்கத்திற்கு செல்லும் முன்னர் அரைத்த பப்பாசிப்பழத்தினை முகத்தில் தேய்த்து சிறுது நேரத்தின் பின்னர் நன்றாக கழுவிக்கொள்ளும் போது ஆண்களின் முகமும் பளபளப்படையும்.

அழுத்தங்கள் காரணமாக ஆண்களுக்கு முடி உதிர்வு அதிகமாக ஏற்படும் இதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணைய் ஆகியவற்றை சம அளவில் கலந்து அதனை தலையில் தேய்த்து வரவேண்டும். இதனால் முடியுதிர்வு பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவது மட்டுமல்லாமல் உடல் குளிர்ச்சியும் ஏற்படும்.

இந்த அழகுக்குறிப்புகயையும் தாண்டி எப்போதும் கோபத்தை கட்டுப்படுத்தி புன்னகை கூடிய முகத்தினை ஆண்கள் கொண்டிருப்பது அவர்களுக்கு தனி அழகைத் தரும் ஓர் என்பதனையும் மறந்துவிடக்கூடாது. பெண்களுக்கும் இது பொருந்தும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg