Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சாத்தானைப் படைத்தது ஏன்? – யார் இந்த சாத்தான்?

In
Updated: 13:57 GMT, Jan 27, 2018 | Published: 13:57 GMT, Jan 27, 2018 |
0 Comments
1244
This post was written by : Puvanes

அமைதியான உலகைப்படைத்த கடவுள், அதற்கெதிராக சாத்தானை ஏன் படைத்தார்? சாத்தான் இல்லாவிட்டால் உலகம் அமைதியாக இருக்குமே? ஏன் அவனையும் கடவுள் படைத்தார் என்ற மிகப்பெரிய கேள்வி பலருக்கு இருப்பது சாத்தியமே.

காரணமின்றி கடவுள் சாத்தானைப் படைக்கவில்லை ஆனாலும் புனித பைபிள் சாத்தானைப் படைத்ததற்கான காரணத்தை முழுவதுமாக எடுத்தியம்பவில்லை. எனினும் கடவுளின் படைப்பு அனைத்தும் மக்களின் நன்மைக்காக மட்டுமே.

ஆரம்பத்தில் கடவுள் படைத்த உலகில் மனிதர்கள் நல்லவர்களாகவே வாழ்ந்தார்கள் மகிழ்ச்சி இருந்தது. காலப்போக்கில் பிசாசுகள் கடவுளுக்கு எதிராக செயற்படத் தொடங்க அவற்றை பின்பற்றிய மனிதர்க் பெரும் பாவங்களைச் செய்து பழியைத் தேடிக்கொண்டார்கள். இதனால் பிசாசுகள் பூமியில் நிலைபெற்றன.

பரிசுத்தமான பைபிளின் கூறுவது யாதெனின் சாத்தான் என்பது நபர், மனிதன், ஒரு ஆன்மா. பரலோகப் பிதாவுடன் ஒரு பிசாசும் பல பேய்களும் இருந்தாக பைபிள் மொழிகின்றது.

புனித நூலின் பிசாசு எனப்படுவது கொடியதோர் உயிரினமாகவும் சாத்தான், லூசிபையர் மற்றும் பெயெல்செபூல் எனக் கூறப்படுகின்றது. அந்தப் புனித நூலில் இவை தீய சக்திகளாக அடையாளப்படுத்தப்படுகின்றது.

கடவுள் சாத்தானைப் படைக்கவில்லை அவர் லூசிபையர் எனும் சக்திமிக்க தேவதையை உருவாக்கினார். இந்த லூசிபையருக்கு கடவுளின் படைப்பின் மேல் திருப்தி இல்லை. அதனால் கடவுளை விடவும் அதிக சக்தியினை தான் பெற விரும்புகின்றார் அதற்காக கடவுளை எதிர்க்க ஆரம்பிக்கின்றார்.

கடவுளிடம் தோற்ற லூசிபையர் தனக்கான ஒரு கூட்டத்தினைச் சேர்த்துக்கொண்டு கடவுளையே எதிர்க்க ஆரம்பிக்கின்றார். பரலோகத்தில் கடவுளால் தோற்கடிக்கப்பட்ட லூசிபையர் பூமிக்கு வந்து சேர்கின்றார். இந்த விளக்கங்கள் வெளிப்படுத்தல் 12:4 ஆம் அத்தியாயத்தில் தெளிவாக குறிப்பிடப்படுகின்றது.

உலகைப்படைத்த கடவுள் மனிதனுக்கு செய்ததைப் போன்று, அவரது படைப்பு வேறு எந்த படைப்புகளுக்கு எதுவும் செய்ததில்லை என சாத்தான் நம்பிய காரணமே, லூசிபையர் கடவுளுக்கு எதிராக திரும்பியதற்கான மற்றொரு காரணமாக நம்பப்படுகின்றது.

கடவுளால் மனிதன் உலகில் படைக்கப்பட்ட போது, மனிதன் கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்டது மற்றும், மனிதனுக்கு இந்த பூமியின் மீது நிபந்தனையற்ற பல அதிகாரரங்கள் மனிதர்களுக்கு வழங்கப்பட்டதை லூசிபையரால் பொருத்துக்கொள்ள முடியவில்லை எனவும் நம்பப்படுகின்றது.

கடவுள் லூசிபையரை பாவம் இல்லாமல் படைத்தார் என புனித நூலில் கூறப்பட்டுள்ளதாக விவிலிய அறிஞர்கள் தெரிவிக்கின்றார்கள். மேலும் லூசிபையரை “பிரகாசம்” அல்லது “காலை நட்சத்திரம்,” எனவும் அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாமம் 1.31 இல் லூசிபையர் கடவுளை வழிபட்டு அவரைத் துதிக்கவே படைக்கப்பட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் படைப்பு மாறுபட்டது அதனையும் காரணத்துடனே கடவுள் செய்தார். அழிவு என்ற ஒன்று இருக்கும் போது தானே ஆக்கம் அர்த்தப்படுகின்றது. ஒளி பரவ வேண்டும் எனின் இருளும் அவசியமாகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg