Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இது வித்தியாசமான பாயாசம்! – முயற்சி செய்து பாருங்கள்

In
Updated: 14:30 GMT, Jan 27, 2018 | Published: 14:30 GMT, Jan 27, 2018 |
0 Comments
1070
This post was written by : Puvanes

பாயாசம் பிடித்தமானதொன்று. தமிழர்களில் விசேட தினங்கள், பண்டிகைகளில் பாயாசம் தனி இடத்தினைப் பிடித்துக் கொள்ளும். அப்படியானதோர் பாயாசத்தை வித்தியாசமாக மாம்பழத்தில் செய்வது எப்படி?

முதலில் பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அரிசியை பாலில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு மேசைக்கரண்டி வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.

பாலுடன் குங்குமப்பூ பாலையும் ஊற்றி 15-20 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் அதனை ஊற்றி அதனுடன் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

கொதித்த கலவையில் கண்டென்ஸ்ட் பாலை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, மாம்பழக் கூழ் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து முந்திரியையும், சிறிது மாம்பழத் துண்டுகளையும் தூவினால், சுவைமிக்க வித்தியாசமான மாம்பழ பாயசம் காத்திருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg