Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மறைந்தும் எம்மிடையேமறையாத மாபெரும் கலைஞன் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன்

In
Updated: 18:54 GMT, Jan 27, 2018 | Published: 18:54 GMT, Jan 27, 2018 |
0 Comments
1324
This post was written by : Puvanes

‘பெப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன் (வயது 73) உடல்நலக்குறைவுகாரணமாக கடந்த 22.01.2018 அன்று இறைவனடி சேர்ந்தார். அவரின் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது.

‘தோன்றின் புகழொடுதோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமைநன்று’.(குறள் 236)

இதற்கு,’எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும். இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதேநல்லது’ என கலைஞர் அழகான ஒரு பொழிப்புரை கொடுத்துள்ளார். வள்ளுவனின் இந்தவாக்கிற்குஅமையவாழ்ந்துகாட்டியவர் கலைஞானி ஏ.ஈ.மனோகரன். ஆம்!ஈழக்கலைவெளியில் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரனின் இழப்பு பேரிழப்பாகும்.

‘சிலோன் மனோகர்’ என அறியப்படும் ஏ.ஈ.மனோகரனை எம் இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதற்கு அவ்வளவு வாய்ப்பில்லை. ஏனெனில்,முதுமை காரணமாககடந்த 10 வருடங்களாக ஏ.ஈ.மனோகரன் கலைத்துறையில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார்.

உங்களுக்கு,’சுராங்கனி சுராங்கனி…’பாடல் ஞாபகம் இருக்கின்றதா? புரிகின்றது… நீங்கள் எதை நினைக்கின்றீர்கள் என்று…
ராப் இசைப் பாடகர் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் பாடியபாடல் தானே அது வென்று நினைக்கிறீர்கள். அல்லது, ‘பந்தயம்’ படத்தில் விஜய் அன்டனியின் இசையில் ‘காதல் கானா’என்ற பெயரில் வந்த பாடலைத் தானே நினைக்கிறீர்கள்…

இவை இரண்டுமே’ரீமிக்ஸ்’பாடல்கள். இந்த பாடல்களின் மூல (ஒரிஜினல்) வடிவத்திற்கு சொந்தக்காரர் நம் நாட்டின் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரனே!
1980 களில் கொடிகட்டிப் பறந்த இந்தப்பாடல் இலங்கையில் தமிழ், சிங்கள மொழிகள் உட்பட இந்தியாவிலும் ஏழுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஒரு பாடல் போதும், மனோகரனை உலகறியச் செய்வதற்கு..

அன்றுமட்டும் யு-ரியூப் இருந்திருந்தால் இன்று தனுஷின் ‘வை திஸ் கொலைவெறி..’பாடல் உலகப் பிரசித்தம் பெற்றதுபோல’சுராங்கனி…’யும் பெற்றிருக்கும்.
1970 களில் இலங்கையில் பொப்பிசைப் பாடல்கள் பிரசித்தமானவை. தமிழ்,சிங்களமொழிகளில் பல பொப்பிசைப் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.
தமிழில் குறிப்பிடத்தக்க பொப்பிசைப் பாடகர்களாக ஏ.ஈ.மனோகரன், நித்திகனகரத்தினம், அமுதன் அண்ணாமலை, இராமச்சந்திரன், முத்தழகு, முதலானோர் விளங்கினர்.

சிங்கள மக்கள் மத்தியில் எம்.எஸ்.பெர்ணான்டோ, மில்டன் மல்லவராச்சி, எச்.ஆர்.ஜோதிபால, பிரடீசில்வா, ஷெல்டன் பெரேரா உட்பட பல பாடகர்கள் இந்தத்துறையில் பிரசித்தமாகியிருந்தனர்.

ஏ.ஈ.மனோகரன் தமிழ், சிங்களம், ஆங்கிலம் உட்பட இந்தியமொழிகளிலும் பாடும் ஆற்றல் மிக்கவர். இலங்கையில் சிங்கள கலைஞர்களுக்கு இணையாகபுகழ்பெற்றவர். அதனால் இவருக்கு சிங்கள ரசிகர்களும் ஏராளமாக இருந்தனர்.

தமிழகத்தில் கானாபாடல்களுக்குகிட்டியிருக்கும் புகழும் வரவேற்பும் போன்று இலங்கையில் தமிழிசைப்பாரம்பரியத்தில் பொப்பிசைப் பாடல்களுக்கும் ஒருகாலத்தில் மகத்தான வரவேற்பு கிட்டியது. மனோகரன் இலங்கையிலும் இந்தியாவிலும் தமது பொப்பிசைப்பாடல்களினால் புகழ் பெற்றவர்.

அந்தப் புகழேஅவருக்குதென்னிந்திய திரைப்படங்களுக்கு நுழைவதற்கு மூலதனமாகியது. ‘சிலோன் மனோகர்’என்ற பெயருடன் ரஜினி,கமல் உட்பட பல நடிகர்களின் படங்களில் துணைநடிகராகவும், வில்லன் பாத்திரத்திலும் நடித்திருந்தார். இறுதியாகமாதவனின் ‘ஜே ஜே’படத்தில் தோன்றியிருந்தார். அங்கு ஐந்து மொழிகளில் வெளிவந்த படங்களில் அவர் நடித்திருப்பதாக அறியப்படுகிறது.

இலங்கையில், ஜோ தேவானந்த்தின் ‘பாசநிலா’,வி.பி.கணேசனின் ‘புதியகாற்று’,ஏ.சிவதாசனின் ‘வாடைக்காற்று’ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.
என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவர் பெரிதும் பிரபலமானது பொப்பிசைப் பாடல்களினாலேயே. அதற்குகாரணம், எமது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும்ம தநம்பிக்கைகளையும், அதேசமயம் மூட நம்பிக்கைகளையும், கிராமப்புறங்களின் வெள்ளாந்திக்க குணத்தையும், நகரப்புறத்து போலித்தனங்களையும், நவநாகரீகங்களையும் அடிக்கடிமாறும் பண்பாட்டுக்கோலங்களையும், விலைவாசி ஏற்றங்களையும் மனோகரனின் பொப்பிசைப்பாடல்கள் பேசுபொருளாக்கியிருந்தன. அதனால், அவரது பாடல்கள் மக்களுக்கு நெருக்கமாகியிருந்தன.

‘இலங்கை என்பது எமது தாய்த்திருநாடு’, ‘தாராரேதாரைப் போடுடா’, சுராங்கனி’,’மால்மருகாஎழில் வேல் முருகா’,’கண்டிநகர் சென்று வருகிறோமம்மா’,’யாழ்ப்பாணம் போகரெடியா’முதலான அவரது பாடல்கள் இன்றும் எங்காவது ஒலித்துக்கொண்டிருக்கும்.

அவருக்கு மும்மொழியிலும் பேசும், பாடும் ஆற்றல் இருந்தமையால் இலங்கையில் அனைத்து ரசிகர்களினதும் அபிமானத்தைப்பெற்றிருந்தார். தமிழ்வரிகளையே உடனுக்குடன் சிங்கள–ஆங்கிலமொழிகளிலும் மாற்றிப் பாடும் ஆற்றல் கொண்டிருந்தவர்.

ஏ.ஈ.மனோகரன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பாடிய பாடல்களை இன்றைய குழந்தைகளும் தமது மழலைக்குரலில் பாடுகின்றனர் என்றால், அந்தப் பாடலில் உள்ளவசீகரம் தான் அதற்குக் காரணம்.

நித்திகனகரட்ணத்தின் ‘கள்ளுக்கடைப் பக்கம் போகாதே..’, ஏ.ஈ.மனோகரனின் ‘சுராங்கனி..’பாடல்கள் எல்லாம் கடல் கடந்து ஒலித்தபாடல்கள். ஆனால், ஈழத்தமிழ் இசையில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த பொப்பிசையும், பைலாபாடல்களும் இன்று அருகிவிட்டன. இவை இரண்டும் ஏதோசிங்கள இசைவடிவங்கள் என்றபேச்சுத்தான் இன்று இருக்கின்றது.

தென்னிந்திய இறக்குமதிகளால் எம் கலைவடிவங்களைஎம்மவர்களே ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளிக்கு,கடந்த மூன்று தசாப்தகாலயுத்தமும் ஒருகாரணம் தான். ஆனால், தற்போது மீண்டும் எங்கள் சினிமா வளர்கின்றது. இசை வடிவங்கள் உயிர்பெறுகின்றன. எனவே, எம்முன்னோர்கள் விதைத்துச் சென்ற கலை வடிவங்களைஎதிர்கால சந்ததியினருக்கு கடத்தவேண்டிய தேவை இளையவர்களிடம் இருக்கின்றது.

ஏ.ஈ.மனோகரன் இன்றுஎம்மிடையே இல்லை. அவர் மறைந்தாலும்,அவர் விட்டுச் சென்றபொப்பிசை எம்மிடம் இருந்து மறையாது. ஈழத்தமிழ் இனம் வாழும் வரை அவர் இசையும் வாழும்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg