Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரேஸிலில் துப்பாக்கிச்சூடு: 14 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:08 GMT, Jan 28, 2018 | Published: 04:08 GMT, Jan 28, 2018 |
0 Comments
1169
This post was written by : Suganthini

பிரேஸிலிலுள்ள இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேஸிலின் போர்ட்ரெலெஷா (Fortaleza) பகுதியிலுள்ள இரவு விடுதியொன்றிலேயே நேற்று (சனிக்கிழமை) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவரும் குழுவினரே, துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 2 சிறுவர்கள் அடங்குவதுடன், காயமடைந்தவர்களில் 12 வயதுச் சிறுவனொருவனும் அடங்குவதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கான சரியான  காரணம் தெரியவில்லையென்பதுடன், போதைப்பொருள் கடத்தல் குழுக்கள் இரண்டுக்கிடையிலான மோதல் துப்பாக்கிச்சூட்டில் முடிந்துள்ளதாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்,  பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg