Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன – ஜப்பான் உறவை வலுப்படுத்த கூட்டு முயற்சிக்கு வலியுறுத்து

In உலகம்
Updated: 07:43 GMT, Jan 28, 2018 | Published: 07:43 GMT, Jan 28, 2018 |
0 Comments
1220
This post was written by : Suganthini

சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு கூட்டு முயற்சி தேவையென, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி வலியுறுத்தியுள்ளார்.

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் டரோ கொனோவுக்கும், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜிக்குமிடையிலான சந்திப்பு, பீஜிங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றபோதே, சீன வெளிவிவகார அமைச்சர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘தற்போது சீனாவுக்கும் ஜப்பானுக்குமிடையிலான உறவு முக்கிய கட்டத்திலுள்ளதுடன், இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்பட  வேண்டும். இந்த இரு நாடுகளுக்கிடையில் உறவை வலுப்படுத்தக் கூட்டு முயற்சி தேவை’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ‘இரு நாடுகளுக்குமிடையில் உறவை மேம்படுத்துதல் மற்றும் அபிவிருத்தி செய்தல் இரு நாடுகளின் நலன்களிலும் தங்கியுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg