Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கலேயில் குடியேற்றவாசிகளுக்கு இடையில் மோதல்- ஐவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 06:57 GMT, Feb 2, 2018 | Published: 06:57 GMT, Feb 2, 2018 |
0 Comments
1117
This post was written by : Elakkiya

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் நோக்கில் பிரான்ஸ் துறைமுக நகரான கலேயில் தங்கியிருந்த குடியேற்றவாசிகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில்  துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ் ஊடக தகவல்களின் பிரகாரம் ஆப்கான் மற்றும் எரித்திரிய குடியேற்றவாசிகளுக்கு இடையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு மோதல் ஏற்பட்டதாகவும் மோதலில் 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் நான்கு எரித்திரிய இளைஞர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.  இவர்கள் 16 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவை பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த போதே இவ்வாறு மோதல் வெடித்துள்ளது. இதன்போது சுமார் 100 எரித்திரியர்களும் 30 ஆப்கானிஸ்தானியர்களும் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் சுமார் இரு மணிநேரம் மோதல் நீடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg