Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் இராணுவ ஹெலிகொப்டர்கள் விபத்து- ஐவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 10:30 GMT, Feb 2, 2018 | Published: 10:29 GMT, Feb 2, 2018 |
0 Comments
1067
This post was written by : Elakkiya

தெற்கு பிரான்ஸில் இராணுவ ஹெலிகொப்டர்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஐவர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்செஸ் ஏரி, செயின்ட் டிரொப்பெஸ்ற்கு வடக்கு பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் அவரை தேடும் பணிகளில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்கான காரணம் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

விபத்தில் சிக்கிய இரண்டு ஹெலிகொப்டர்களும் இராணுவத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகின்றது. இவைதவிர மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg