Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காஷ்மீரில் போர் பதற்றம் – மக்கள் இடம்பெயர்வு!

In இந்தியா
Updated: 07:27 GMT, Feb 6, 2018 | Published: 07:27 GMT, Feb 6, 2018 |
0 Comments
1198
This post was written by : Litharsan

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் எல்லை மீறிய தாக்குதல் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டிருந்த நிலையில் இந்த எல்லை மீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினரும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியான காஷ்மீர் ராஜோரி பகுதியில் மக்கள் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இந்தத் தாக்குதல்களிலிருந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் இருப்பிடங்களை விட்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg