Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியசாலைக்குள் துப்பாக்கிச்சூடு! – கைதியை மீட்டுச்சென்ற தீவிரவாதிகள்

In இந்தியா
Updated: 08:42 GMT, Feb 6, 2018 | Published: 08:42 GMT, Feb 6, 2018 |
0 Comments
1151
This post was written by : Litharsan

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரிலுள்ள வைத்தியசாலைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன் சிகிச்சைக்கு அழைத்துவரப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கைதி ஒருவரை மீட்டுச்சென்றுள்ளனர்.

ஸ்ரீநகரில் உள்ள ஸ்ரீமஹராஜ் ஹரி சிங் வைத்தியசாலையில் சிகிச்சையளிப்பதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) பாகிஸ்தான் கைதியான நவீத் என்பவரை பொலிஸார் அழைத்துவந்தனர். இந்நிலையில் தீவிரவாதிகள் சிலர் வைத்தியசாலைக்குள் புகுந்து பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன் குறித்த கைதியை காப்பாற்றிச் சென்றுள்ளனர்.

மருத்துவமனையில் கைதியைக் கண்காணிக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சுதாகரித்து பதில் தாக்குதல் நடத்தத் தயாராக முன்னர் கைதியை  மீட்டு தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதனால் வைத்தியசாலை வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தப்பிச்சென்ற தீவிரவாதியைத் தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg