Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனப்பிரச்சினை தீர்விற்கான மக்களின் ஆணையே இத்தேர்தல்: கோவிந்தன்

In இலங்கை
Updated: 07:30 GMT, Feb 8, 2018 | Published: 05:29 GMT, Feb 8, 2018 |
0 Comments
1110
This post was written by : Risha

எமது மக்களின் இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை காண்பதற்கு மக்களிடம் நாம் பெறுகின்ற ஆணையாகவே இந்த தேர்தலை நோக்குகின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடங்கி இன்றுவரை இந்த நாட்டில் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்ததில்லை. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற மொழி உரிமைச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதிலிருந்து தமிழ் மக்கள் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் இன்றுவரை போராடிவருகின்றோம்.

வடக்கு கிழக்கில் தேசிய கட்சிகள் தங்களுடைய முகவர்கள் மூலமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் கோடிக்கணக்கான பணத்தினை செலவிட்டு தமிழ் மக்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டிய நேரத்தில் தமிழ் மக்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமிருந்து பிரித்து அதன் பலத்தை உடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு பேரினவாதக் கட்சிகளும் களமிறங்கியிருக்கின்றன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg