Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதி முறைகேட்டில் கைதான ஜனாதிபதி செயலக முன்னாள் அதிகாரிக்குப் பிணை!

In இலங்கை
Updated: 08:24 GMT, Feb 8, 2018 | Published: 08:24 GMT, Feb 8, 2018 |
0 Comments
1147
This post was written by : Varshini

அரச நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எஸ்.குணரத்ன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இவர் இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 500,000 ரூபாய் பெறுமதியான இரு சரீரப்பிணைகள் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப்பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், இவருடன் கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் கணக்காளரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு 17.9 மில்லியன் ரூபாய் அரச நிதியை பயன்படுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு எட்டு அதிசொகுசு வாகனங்களை இவர்கள் கொள்வனவு செய்துள்ளனர். இதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளமை கண்டறிப்பட்ட நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் செயலாளரும் முன்னாள் கணக்காளரும் கடந்த மாதம் 25ஆம் திகதி பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg