Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரிகேடியர் விவகாரம்: ஜனாதிபதியின் உத்தரவிலுள்ள உள்நோக்கம் என்ன?

In இலங்கை
Updated: 11:54 GMT, Feb 8, 2018 | Published: 11:54 GMT, Feb 8, 2018 |
0 Comments
1772
This post was written by : Varshini

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் அமர்த்தியதன் மூலம், அவரை இலங்கை அரசாங்கம் சத்தமின்றி நாட்டிற்கு திருப்பியழைக்குமென தாம் எதிர்பார்ப்பதாக தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரிகேடியரை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் அரசியல் நோக்குடையதென தெரிவித்துள்ள கலாநிதி ஜெஹான் பெர்னாண்டோ, அது சரியான தீர்மானம் அல்லவென்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் ராஜதந்திரி என்ற ரீதியில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் செயலை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட இலங்கையின் சுதந்திரத் தினத்தன்று, அதனை எதிர்த்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, லண்டனிலுள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தில் கையை வைத்து, அறுப்பதைப் போன்று சைகை காண்பித்தார்.

இச்சம்பவம் உலகளாவிய ரீதியில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு, அவரை பணி இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும், குறித்த இடைநிறுத்தத்தை ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று பணிப்புரை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg