Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒற்றைச் சந்தை அணுகலை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்: டேவிட் டேவிஸ்

In
Updated: 07:21 GMT, Feb 9, 2018 | Published: 07:19 GMT, Feb 9, 2018 |
0 Comments
1074
This post was written by : Elakkiya

பிரெக்சிற்றுக்கு பின்னரான நிலைமாற்று காலத்தின்போது பிரித்தானியாவின் ஒற்றைச்சந்தை அணுகலை கட்டுப்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாக பிரெக்சிற் செயலாளர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.

ஒற்றை சந்தைக்கான பிரித்தானியாவின் அணுகலை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஐரோப்பிய ஒன்றியம் தவறான கருத்துக்களுடன் வெளிப்படையாக ஒரு ஆவணத்தை வெளியிடுவது நல்லது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் தெரேசா மே தலைமையில் இவ்வாரம் நடைபெற்ற அரசாங்கத்தின் மூலோபாயங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பிரெக்சிற் அணுகுமுறைகள் தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மூலோபாயத்தின் மூத்த அரசாங்க உறுப்பினர்களுக்கு இடையில் உடன்பாடு உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த டேவிட் டேவிஸ், இன்னமும் முன்னேற்றம் அவசியம் என்று பதிலளித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg