Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சியோலில் தென்கொரியர்கள் ஆர்ப்பாட்டம்

In உலகம்
Updated: 09:18 GMT, Feb 10, 2018 | Published: 09:18 GMT, Feb 10, 2018 |
0 Comments
1136
This post was written by : Suganthini

தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் மற்றும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சதோதரிக்குமிடையில், சந்திப்பு நடைபெற்ற வேளையில்,   தென்கொரியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கொரியாவின் ஜனாதிபதி இல்லமான புளூ ஹவுஸில் தென்கொரிய ஜனாதிபதிக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரிக்குமிடையில் இன்று (சனிக்கிழமை) சந்திப்பு நடைபெற்றது. இவ்வேளையில், புளூ ஹவுஸிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தென்கொரியத் தலைநகர் சியோலில், நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் உருவப்படத்தை நிலத்தில் போட்டு காலால் மிதித்துள்ளதுடன்,  அவருக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியுள்ளனர்.

தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரியை வரவேற்கும் வகையில், அவருடன் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் சந்திப்பை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg