Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.தே.க. வேட்பாளர் மீது எஸ்.பி. தாக்குதல்!

In இலங்கை
Updated: 09:31 GMT, Feb 10, 2018 | Published: 09:19 GMT, Feb 10, 2018 |
0 Comments
1253
This post was written by : Varshini

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் பிரதேச சபை உறுப்பினரான அநுர பண்டார மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் இணைந்து, இன்று (சனிக்கிழமை) காலை இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக கலஹா ஹேவாஹெட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சண்முகராஜ் எமது ஆதவனுக்கு தெரிவித்தார்.

தாக்குதலில் காயமடைந்த அநுர பண்டாரவும் அவரது உறவினர் ஒருவரும் கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஹேவாஹெட்ட தேர்தல் தொகுதியில் அநுர பண்டாரவிற்கு அதிக செல்வாக்கு காணப்படுவதாகவும் அதன் பின்னணியிலேயே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு ஹேவாஹெட்ட பிரதேச சபை அமைப்பாளர் சாந்தினி கோங்கஹே சென்று நிலைமையை கேட்டறிந்ததாக, கலஹா ஹேவாஹெட்ட பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சண்முகராஜ் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg