Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயணப்பொதியிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு

In இந்தியா
Updated: 06:28 GMT, Feb 14, 2018 | Published: 06:02 GMT, Feb 14, 2018 |
0 Comments
1100
This post was written by : Varatharajan Yuganthini
i-child-1

மேற்கு டெல்லி , நாதபுரா பகுதியைச் சேர்ந்த 7 வயதான சிறுவன் ஒருவனின் சடலம் பயணப் பொதியொன்றிலிருந்து பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 27 வயதான இளைஞன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல்  அசிஷ் என்ற சிறுவன் காணாமல் போயிருந்ததாக அவரது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், குறித்த சிறுவன் கொலைசெய்யப்பட்டு அவனது சடலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கண்டெடுக்கப்பட்டது.

சிறுவன் வசித்து வந்த பகுதியிலிருந்து சில தெருக்களுக்கு அப்பால் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ள நிலையில்,  அங்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன்போது சிறுவனின் சடலம் பயணப் பொதி ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதோடு, குறித்த சடலத்திற்கு அருகில் சில எலிகளும் கொல்லப்பட்டு கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், 27 வயதான அவதேஷ் குமார் என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். அத்தோடு, சிறுவன் காணாமல் போன பகுதி மற்றும் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட சீ.சீ.ரி.வி. காணொளிகளைப் பெற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, சிறுவனின் பெற்றோர் மீது காணப்பட்ட தனிப்பட்ட பகையே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கப்படுவதோடு, பெற்றோரிடம் பணம் பறிக்கும் முயற்சியிலும் இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)