Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகத் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் – பெடரர்

In டெனிஸ்
Updated: 11:27 GMT, Feb 14, 2018 | Published: 11:27 GMT, Feb 14, 2018 |
0 Comments
1099
This post was written by : Litharsan

உலகத் தரவரிசையில் முதலிடம் பிடிப்பேன் என சுவிற்ஸர்லாந்து வீரரான ரோஜர் பெடரர்  தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து ஓபன் டெனிஸ் தொடர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஆரம்பமானது. அதில் போட்டியிடவுள்ள பெடரர் பத்திரிகையாளரிடம் கருத்துத்தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், “ இந்த வருடத்தில் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதனை கடந்த ஆண்டு டிசம்பரிலும் கூறியிருந்தேன். நிச்சயமாக அதனை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது” என்றார்.

முதல் சுற்றில் தகுதி நிலை வீரர் ருபென் பிமெல்மான்சை (பெல்ஜியம்) எதிர்கொள்ளவுள்ள பெடரர், அரையிறுதி வரை முன்னேறினால் தற்போது முதலிடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடாலைப் பின்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg