Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜொங் இல்லின் பிறந்ததின ஏற்பாடு

In உலகம்
Updated: 11:34 GMT, Feb 14, 2018 | Published: 11:34 GMT, Feb 14, 2018 |
0 Comments
1146
This post was written by : Suganthini

வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜொங் இல்லின் 77ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் வடகொரியாவில் நடைபெற்று வருகின்றன.

1942ஆம் ஆண்டு பெப்ரவரி 16ஆம் திகதி பிறந்த கிம் ஜொங் இல், கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் திகதி காலமானார்.

இந்நிலையில், அவரது பிறந்ததினமான எதிர்வரும் 16ஆம் திகதியை தேசிய விடுமுறை தினமாக அறிவித்து, வடகொரியாவில் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை வடகொரிய அதிகாரிகள்  மேற்கொண்டு வருவதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வடகொரியத் தலைவராக கடந்த 1994ஆம் ஆண்டு பதவியேற்ற கிம் ஜொங் இல், மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

கிம் ஜொங் இல்,  வடகொரியாவின் தற்போதைய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் தந்தையும் ஆவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg