Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி -செல்வம் அடைக்கலநாதன்

In இலங்கை
Updated: 12:40 GMT, Feb 14, 2018 | Published: 12:38 GMT, Feb 14, 2018 |
0 Comments
1097
This post was written by : poovannan
watermark (7)

மன்னார் மாவட்டத்தில் இந்து மக்களின் வணக்க சிலைகள் உடைக்கப்பட்டுகின்ற சம்பவங்கள் மதங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் சதி நடவடிக்கையாக உள்ளது. குறித்த சம்பவங்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் மதங்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்படுகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் கத்தோலிக்கர்கள் மற்றும் இந்துக்களின் வணக்கச் சிலைகள் உடைக்கப்பட்டன.

மேலும் இந்து மக்கள் உணர்வோடு அனுஷ்டிக்கும் சிவராத்திரி தினத்தில் பல்வேறு இடங்களில் ஆலய விக்கிரகங்களை உடைக்கப்பட்டும் களவாடிச் செல்லப்பட்டும் உள்ளமையானது இந்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே தொடர்ச்சியாக இந்து மக்களுக்கெதிரான இவ்வாறான சம்பவங்கள் தொடராத வகையில் பொலிஸாரும் உரிய அதிகாரிகளும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்வ மதங்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையினை கொச்சைப்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

watermark (9)
watermark (8)
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)