Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் – சுமங்கள தேரர் கோரிக்கை

In இலங்கை
Updated: 05:37 GMT, Feb 17, 2018 | Published: 05:37 GMT, Feb 17, 2018 |
0 Comments
1191
This post was written by : Litharsan

நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற தன்மை மற்றும் குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவரும் அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கடந்த புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவர் கடிதங்களை அனுப்பியுள்ளார்.

அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள உறுதியற்ற நிலை மற்றும் குழப்ப நிலை என்பன நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலை தொடருமெனில் நாட்டின் ஆட்சி மற்றும் பொருளாதாரம் ஆபத்தான நிலைக்குள் தள்ளப்படும். எனவே அரசாங்கம், கடந்த தேர்தல்கிளல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

குறிப்பாக விவசாயம், மதம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்க வேண்டும்.

அத்துடன் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து, தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்” என்று சுமங்கள தேரர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg