Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தரை வெறுத்த மக்களுக்கு புத்தர் கூறிய பதில்!

In
Updated: 14:28 GMT, Feb 17, 2018 | Published: 14:28 GMT, Feb 17, 2018 |
0 Comments
1249
This post was written by : Puvanes

வாழ்வின் துயரங்களுக்கு காரணம் ஆசையே என்பதை உலகிற்கு போதித்த புனிதர் கௌதம புத்தர். இவருடைய போதனைகள் மட்டுமல்லாது அவருடைய வாழ்வில் நடந்த சுவாரசிய சம்பவங்களும் வாழ்வு மேம்பட உதவுகின்றன.

புத்தர் ஊர் ஊராகச் சென்று போதனைகளில் ஈடுபட்டு மக்களுக்கு வாழ்வின் உண்மைகளைப் புரிய வைத்து வருகின்றார். அதன்படி போதனைக்காக ஒரு கிராமத்துக்கு செல்கின்றார்.

அவருடைய போதனைகளை கேட்ட அக்கிராம மக்கள், “இவர் செய்யும் போதனைகளை கேட்டால் இல்லற எண்ணம் மாறி, துறவற வாழ்க்கை மீது பற்று வந்து விடும் போல் இருக்கிறதே,” என கருதினர். இனிமேல் இவருக்கு மரியாதை தரக் கூடாது என்று அதுமுதல் தீர்மானிக்கின்றனர்.

அதன்படி புத்தர் மீது களங்கம் சுமத்தி பலவகையில் இழிவான சொல்லாலும், தீய வார்த்தைகளாலும் திட்டுகின்றனர். ஆனால் புத்தரோ அவை அனைத்தையும் பொறுமையுடன் ஏற்கின்றார்.

இவ்வளவு மோசமான செயல்களைச் செய்தும் புத்தர் எதிர்ப்பு வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தததைக் கண்ட மக்களுக்கு அது வியப்பான விடயமாக இருக்கின்றது. அதனால் குழம்பிப் போன மக்கள் அதற்கான விளக்கத்தினை அவரிடமே கேட்கின்றனர்.

எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக புத்தர் பதிலளிக்கின்றார். “நான் ஒரு கிராமத்திற்கு நேற்று சென்றிருந்தேன். அங்கே உள்ள மக்கள் என்னை அன்போடும், மகிழ்ச்சியோடும் வரவேற்றனர். என் பசியை போக்க நிறைய பழம் கொடுத்தனர். ஆனால், அவற்றை நான் ஏற்று கொள்ளவில்லை. அவர்களிடமே கொடுத்து விட்டேன். அதே போல நீங்கள் பேசிய இழிவான பேச்சையும், உங்களிடமே திருப்பி கொடுத்து விட்டேன். எனக்கு சுவையான பழங்களும் ஒன்று தான், பழிச்சொல்லும் ஒன்று தான்” என்கிறார்.

அவருடைய பதிலுக்கு மக்கள் பதிலளிக்க முடியாமல் அமைதியோடு வெட்கி நிற்கின்றனர். மற்றவர்களிடம் இருந்து நம் செயல்களுக்கு பாராட்டும் கிடைக்கும், அவமதிப்பும் உண்டாகும். நாம் என்ன செய்கிறோமோ, அதுவே நம்மை திரும்ப வந்தடையும். எனவே, நற்செயல்களை மட்டுமே செய்ய வேண்டும். மனதால் நல்லதையே நினைக்க வேண்டும் என்பதை புனிதன் அமைதியோடு போதித்துச் சென்றுள்ளான்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg