Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒருநாள் போட்டி தரவரிசையில் கோஹ்லி, பூம்ரா முதலிடத்தில்

In கிாிக்கட்
Updated: 10:58 GMT, Feb 20, 2018 | Published: 10:58 GMT, Feb 20, 2018 |
0 Comments
1222
This post was written by : Elakkiya

சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தை பெற்றுள்ளார். அதேவேளை ஒருநாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பூம்ரா முதலிடத்தை பெற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த தென் ஆபிரிக்க அணியுடனான ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் வெற்றி மூலம் சர்வதேச கிரிக்கட் சபையின் ஒருநாள் போட்டி அணிகள் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பெற்றுள்ளது.

இந்த தொடரில் தென் ஆபிரிக்க மண்ணில் வரலாற்று சாதனை படைத்த இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி தனிப்பட்ட சாதனையையும் நிகழ்த்தியிருந்தார். அதாவது இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையே அதுவாகும். ஆறு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மொத்தமாக 558 ஓட்டங்களை விராட் கோஹ்லி பெற்றிருந்தார்.

அதேவேளை பந்து வீச்சாளர் பூம்ரா எட்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg