Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஷ்ரபி மோர்டசா மீண்டும் அணியில் இணைந்து கொள்ளலாம்: பங்களாதேஷ் கிரிக்கட் சபை

In கிாிக்கட்
Updated: 07:46 GMT, Feb 21, 2018 | Published: 07:44 GMT, Feb 21, 2018 |
0 Comments
1321
This post was written by : Elakkiya

சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் மஷ்ரபி மோர்டசா மீண்டும் அணியில் இணைந்து கொள்ள விரும்பினால் வரவேற்கப்படும் என்று பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவர் நஸ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.

34 வயது வேகபந்து வீச்சாளரான மோர்டசா கடந்த 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். எனினும் தற்போதும் ஒருநாள் போட்டிகளுக்கான பங்களாதேஷ் அணியை அவரே வழிநடத்துகின்றார்.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற இலங்கை அணியுடனான ரி-ருவென்ரி தொடரில் பங்களாதேஷின் தோல்விக்கு தோல்விக்கு மோர்டசா அணியில் இடம்பெறாதமையும் ஒரு காரணமாக கருதப்பட்டது.

இவ்வாறிருக்க எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுடனான முத்தரப்பு ரி-ருவென்ரி தொடருக்கான பங்களாதேஷ் அணியில் மஷ்ரஃபா இணைந்து கொண்டால் சிறப்பாக அமையும் என்று கருதப்படுகின்றது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நஸ்முல் ஹசன், “மஷ்ரபி தொடர்பாக நாம் விவாதித்திருந்தோம். ஆனால் முடிவு முற்றுமுழுதாக அவரிலேயே தங்கியுள்ளது. நான் மஷ்ரஃபாவுடன் பேசினால் அவர் விளையாடுவார் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இலங்கை தொடரில் அவர் விளையாட வேண்டும் என்று நான் கேட்டிருந்தேன். ஆனால் கட்டாயப்படுத்தவில்லை. டெஸ்ட் கிரிக்கட்டை விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். முஷ்டாபிகுர் ரஹ்மான் தவிர மஷ்ரஃபீ மிகவும் நம்பகமான பந்து வீச்சாளர் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg