Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்தை தாக்கிய கீட்டா சூறாவளி: சுமார் 5 ஆயிரம் பேர் அவதி

In உலகம்
Updated: 05:51 GMT, Feb 21, 2018 | Published: 05:51 GMT, Feb 21, 2018 |
0 Comments
1292
This post was written by : Suganthini

நியூஸிலாந்தின் தென்பகுதியில் அடை மழையுடன் கீட்டா (Gita) சூறாவளி தாக்கியுள்ளதைத் தொடர்ந்து பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக, அப்பகுதியிலுள்ள மக்கள் பலர் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

நியூஸிலாந்தில் கடந்த சில நாட்களாக அடை மழை பெய்துவந்த நிலையில், நியூஸிலாந்தின் தென்பகுதியில் கீட்டா சூறாவளி நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, தென்பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதிக்கான தரைவழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்பகுதியிலுள்ள சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள அதேவேளை, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் நகரமுடியாத வகையில் சிக்கியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அடை மழை காரணமாக கிறிஸ்ட்சேர்ச் நகர் மற்றும் ஏனைய மாகாணங்களிலும்; பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூறாவளி அபாயம் காரணமாக, கிறிஸ்ட்சேர்ச் நகர் உட்பட 4 பிராந்தியங்களில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இருப்பினும், தற்போது கிறிஸ்ட்சேர்ச்சில் அவசரகாலநிலை தளர்த்தப்பட்டுள்ளது. ஏனைய பிராந்தியங்களில் அவசரகாலநிலை தொடர்ந்து அமுலிலுள்ளது.

சூறாவளியைத் தொடர்ந்து கட்டடங்கள் பல சேதமடைந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த  அனர்த்தம் காரணமாக, நியூஸிலாந்தில் 12க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் மீட்புப்பணி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg