Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பி.எஸ்.எல்: கராச்சி-குவெட்டா அணிகள் பலப்பரீட்சை

In கிாிக்கட்
Updated: 04:47 GMT, Feb 23, 2018 | Published: 04:46 GMT, Feb 23, 2018 |
0 Comments
1108
This post was written by : Anojkiyan

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-ருவென்ரி தொடரின், இரண்டாவது லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) டுபாயில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கராச்சி அணிக்கு இமாட் வாசிமும், குவெட்டா அணிக்கு சப்ராஸ் அஹமட்டும் தலைமை தாலைமை தாங்குகின்றனர்.

கராச்சி அணியில், ஜேசன் ரோய், கெவின் பீட்டர்சன், சப்ராஸ் அஹமட், ஷேன் வாட்சன், போன்ற துடுப்பாட்ட வீரர்களும், ராஷித் கான், ரஹாட் அலி போன்ற பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

அதேபோல, குவெட்டா அணியில், பாபர் அசாம், கொலின் இங்ரம், லென்ட்ல் சிமோன்ஸ், இயான் மோர்கன், ரவி போபாரா, சயிட் அப்ரிடி, போன்ற துடுப்பாட்ட வீரர்களும், டைமல் மில்ஸ், மொஹமட் ஆமிர், உஸ்மான் கான் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர்.

இப்போட்டியை பொறுத்தவரை இரு அணிகளும் சமபலம் பொருந்திய அணிகளாகவே உள்ளன. ஆகையால் இப்போட்டியின் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg