Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகையே அழிக்க முற்பட்ட அமெரிக்கா…!

In
Updated: 14:25 GMT, Feb 24, 2018 | Published: 14:25 GMT, Feb 24, 2018 |
0 Comments
1082
This post was written by : Puvanes

உலகில் நடைபெறும் அனைத்து யுத்தங்களிலும் மூக்கை நுழைக்கும் வல்லரசு அமெரிக்கா என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதன் பணம், அதிகாரம், வளர்ச்சி என்பன அனைத்தும் உலக நாடுகளிலும் தாக்கத்தினை செலுத்தி வருகின்றது.

21 ஆம் நூற்றாண்டில் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட அதீத வளர்ச்சிகளுக்கு மட்டுமல்லாது, உலக நாடுகள் ஒவ்வொன்றின் வளர்ச்சிகளுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா உதவி செய்து வருகின்றது என்பதும் உண்மை.

இத்தகைய அமெரிக்கா உலகையே அழிக்கும் வகையில் நிலவையே அணுகுண்டு வீசி அழிக்க முயற்சிகளை திட்டமிட்ட விடயம் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

1958ஆம் ஆண்டு Project A119 என்ற திட்டத்தின் மூலம் நிலவை அணு குண்டு மூலம் முற்றாக தகர்த்து விட அமெரிக்கா திட்டம் தீட்டியிருந்தது.

1957ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா தனது சொந்த செயற்கைக்கோளினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வரலாற்றுச் சாதனையைச் செய்தது.

இதன் காரணமாக அப்போது விண்வெளி ஆராய்ச்சியில் முன்னிலை வகித்த அமெரிக்காவானது சோவியத் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க திட்டமிட்டது.

அதற்காக ரஷ்யாவிற்கு தெரியும் வகையில் நிலவை வெடிக்க வைக்க திட்டமிட்ட அமரிக்கா, அணுகுண்டு திட்டத்தினைக் கையில் எடுத்தது. எனினும் இதனால் பூமிக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதனால் அமெரிக்க இராணுவம் இந்த அணுகுண்டு திட்டத்தினை கைவிடும் வகையில் அப்போதைய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததனால் குறித்த திட்டம் கைவிடப்பட்டது. இந்தத் தகவல்களை நாசாவின் முன்னாள் பிரதிப் பணிப்பாளரான லியோனாட் ரெய்பல் உலகத்திற்கு அம்பலப்படுத்தினார்.

மற்றொரு வகையில் நிலவு வேற்றுக்கிரகவாசிகளால் கட்டப்பட்டது என்பதை அறிந்து கொண்ட காரணத்தினாலேயே அமெரிக்கா இந்த திட்டத்தினை கையில் எடுத்தது எனக் கூறப்படுகின்றது.

விண்வெளி ஆய்வுகள் தொடர்பில் அப்போது ஆய்வுகளை நடத்திவந்த அமெரிக்கா நிலவில் வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பை கண்டு பிடித்த காரணத்தினாலேயே இந்தவகை அணுத்திட்டத்தினை மேற்கொள்ளவிருந்தாகஒரு சிலர் தெரிவித்துள்ளனர்.

அதன் சந்தேகத்தன்மையை களையவே 1969ஆம் ஆண்டு அப்பலோ 11 என்ற நிலவுப்பயணத்தை மேற்கொண்டதாகவும், அப்போது அது உறுதி செய்யப்பட்ட காரணத்தினாலேயே தொடர்ந்து நிலவு குறித்த ஆய்வுகள் இழுபறியாகியுள்ளன எனவும் புதுத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் உலக வல்லரசாகவுள்ள அமெரிக்கா இந்த உலகத்திற்கு ஏற்படுத்தவிருந்த பாரிய அழிவு தடுக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை..

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg