Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென் ஆபிரிக்காவை 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி

In கிாிக்கட்
Updated: 22:38 GMT, Feb 24, 2018 | Published: 22:38 GMT, Feb 24, 2018 |
0 Comments
1159
This post was written by : Arun Arokianathan

தென் ஆபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பறிகொடுத்தது. அதையடுத்து நடைபெற்ற ஒரு நாள் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது.

இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கேப்டவுனில் நேற்றிரவு நடைபெற்றது.

நாணயச்சுழற்சியில் வென்ற தென்ஆப்ரிக்கா அணி கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 172 ஓட்டங்களை எடுத்தது. 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கட்கள் இழப்பிற்கு 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதன் படி 7 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவிய தொடரையும் 2ற்கு 1 என்ற போட்டிகள் கணக்கில் இழந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg