Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரை காப்பாற்றும் மைத்திரி – கூட்டு எதிர்க்கட்சியின் அடுத்த திட்டம்

In இலங்கை
Updated: 09:40 GMT, Feb 27, 2018 | Published: 09:31 GMT, Feb 27, 2018 |
0 Comments
1252
This post was written by : Puvanes

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யார் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தாலும் ஒன்றிணைந்த கூட்டு எதிர்கட்சி அதற்கு முழு ஆதரவையும் வழங்கும் என நாடாளுமனற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மீனுவங்கொடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமருக்கோ அல்லது இந்த அரசாங்கத்திற்கோ முறையாக ஆட்சி செலுத்த முடியாது என்பது கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மூலம் தெளிவாகிவிட்டது எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய நிலையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கும், பிரதமருக்கும் மக்கள் ஆதரவு இல்லை என்பதும் தெளிவாகிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அனைத்து செயற்பாடுகளையும், கூட்டு எதிர்கட்சி முன்னெடுத்துள்ளது எனினும் ஜனாதிபதி பிரதமரை காப்பாற்றி வருவதாலேயே இந்த விடயத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

எனவே இனியும் ஊழலில் ஈடுபட்ட பிரதமரை காப்பாற்ற வேண்டாம் என ஜனாதிபதிக்கு நாம் கோரிக்கை விடுப்பதோடு, நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்த ஜனாதிபதி முயற்சி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாகவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg