Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினகரன் ஆதரவாளர்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு

In இந்தியா
Updated: 05:14 GMT, Mar 2, 2018 | Published: 05:13 GMT, Mar 2, 2018 |
0 Comments
1108
This post was written by : Yuganthini

அரச ஊழியர்கள் தங்களின் பணியினை செய்வதற்கு தடங்களாக இருந்தல் மற்றும் கொலை அச்சுறுத்தல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக தினகரனின் ஆதரவாளர்கள் மீது சென்னை கோட்டைப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினகரனின் ஆதரவாளர்களான தங்கச் தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் பொலிஸ்  தலைமைச் செயலகத்தில், அத்துமீறி உள்நுழைய முயன்றதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான காரணங்களால் நேற்று(வியாழக்கிழமை) அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆனால்,  இவ்விடயம் தொடர்பில் தினகரன் ஆதரவாளர்களான, தங்கச் தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

“ நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை ஒப்பத்தில் முறைகேடு இடம்பெற்றுள்ளது. இதனால் அரசுக்கு பலக்கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொலிஸ் தலைமை காரியாலயத்தில் முறைப்பாடு தெரிவிப்பதற்காக அங்கு சென்றோம்.

ஆனால், பாதுகாப்பு பணியிலிந்த பொலிஸார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் பொலிஸாருக்கும், எமக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது

இந்நிலையில் பொலிஸார் எங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” எனத்  தெரிவித்தனர்.

அ.தி.மு.கவிலுள்ள தினகரனின் ஆதரவாளர்கள் பலர் மாவட்ட ரீதியாக நீக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg